Homeசெய்திகள்கஜா புயலில் இனித்த பணி¸ இப்போது கசக்கிறதா? அமைச்சர் மீது மின் ஊழியர்கள் கடுப்பு

கஜா புயலில் இனித்த பணி¸ இப்போது கசக்கிறதா? அமைச்சர் மீது மின் ஊழியர்கள் கடுப்பு

தமிழ்நாடு மின் துறை அனைத்து பொது தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் இன்று நடைபெற்றது. வட்டத் தலைவர் சாமுவேல் தலைமை தாங்கினார் மாநில துணைத் தலைவர் டி.பாண்டியன் மாநில துணை செயலாளர் ஆர்.சுப்பிரமணி உள்பட பலர் முன்னிலை வகித்தனர் மாநில துணை செயலாளர் சி.எல்லப்பன் அனைவரையும் வரவேற்றார் வட்ட செயலாளர் எஸ்.முருகன் வட்ட பொருளாளர் எம்.வெங்கடேசன் ஆகியோர் சங்க செயல்பாடு குறித்த அறிக்கையை வாசித்தனர் இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் எம்.முனியப்பன் மாநில பொதுச் செயலாளர் என்.கே.முத்தையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

மாநிலத் தலைவர் முனியப்பன் பேசுகையில் மதுரை மற்றும் கள்ளக்குறிச்சியில் துணை மின்நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. கஜா புயலின் போது சிறப்பாக பணியாற்றியதற்காக மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி புகழ்ந்து தள்ளினார். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அன்று சொன்ன அமைச்சர் இன்றைக்கு ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது எங்கள் வேலையில்லை. அதற்கு  ஒப்பந்தகாரர்கள்தான் பொறுப்பு என்கிறார். அன்று பணி நிரந்தம் செய்யப்படுவார்கள் என்று சொன்ன அமைச்சர் இன்று இப்படி பேசுவது எந்த விதத்தில் நியாயம்? மின்துறை தொழிலாளர்களுக்கு லீவு என்பது கிடையாது. தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி எடுக்கின்றனர். பதவி உயர்வில் திருவண்ணாமலை மாவட்ட மின்துறை நிர்வாகம் கேவலமாக நடந்து வருகிறது என்றார். 

மின்வாரியங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. மின்சார சட்டம் 2020 திரும்ப பெற்றிட வேண்டும். மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தபடி திருவண்ணாமலை மின் வட்டத்தை இரண்டாக பிரித்து ஆரணி மின் பகிர்மான வட்டம் துவங்கிட வேண்டும். கலசப்பாக்கம் தாலுகா அந்தஸ்து பெற்று விட்டதால் மின்வாரிய அலுவலக ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தி தர வேண்டும் போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கையும் விடப்பட்டது. 

See also  சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த கள்ளக்காதலி

சங்க நிர்வாகிகள் கே.பி.பழனி¸ என்.வெங்கடாஜலம்¸ டி.சுரேஷ்¸ எஸ்.கலையரசி¸ பிரியதர்ஷினி¸ விஜியராஜ்¸ எஸ்.முருகன்¸ எம்.வெங்கடேசன் ஏ.மாரி¸ இ.பாஸ்கரன்¸ எம்.மதன்¸ ஏ.அந்தோணிசாமி¸ வி.பாண்டியன்¸ கே.சீனிவாசன்¸ பி.சுப்பிரமணி¸ ஜெ.சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயற்குழு எம்.பாபு நன்றி கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!