Homeஆன்மீகம்திருவண்ணாமலை: திருமண வரம் தரும் இராஷ்டிரகூட மன்னன் கட்டிய சிவன்...

திருவண்ணாமலை: திருமண வரம் தரும் இராஷ்டிரகூட மன்னன் கட்டிய சிவன் கோயில்

** 100 சதவீத தேர்ச்சிக்கு ஆசிரியர்கள் விளக்கேற்றி வழிபாடு 
** 48 நாட்கள் தரிசித்தால் திருமணம் நிச்சயம்
** பிரதோஷபாலை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் 

வசூர் ஸ்ரீகல்யாணபுரீஸ்வரர் கோயில் சிறப்புகள் 

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்துள்ள வசூர் என்னும் அழகிய கிராமத்தில் இயற்கை எழில் சூழந்த வயல்களுக்கு மத்தியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இங்கு சிவபெருமான் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியுடன் ஸ்ரீகல்யாணபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மனதார வேண்டி வணங்கி தொடர்ந்து 48 நாட்கள் கோயிலுக்கு வந்து தரிசித்தார் நிச்சயம் திருமணம் கைக்கூடும் என்பது இங்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கையாகவே உள்ளது. பிராத்தனைகள் நிறைவேறியதும் திருமணமானவுடன் தம்பதி சமேதரக மனக்கோலத்தில் வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து புது வஸ்திரம் சாற்றுகின்றனர். 

மேலும் அருட்ச்செல்வம்¸ பொருட்செல்வம்¸ கல்விச்செல்வம் தருபவராக உள்ளதால் இவரைக் காண ஜவ்வாது மலை மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் 100 சதவீத தேர்ச்சி பெற விளக்கேற்றி வழிபடுகின்றனர். இங்கு தீர்த்தமாக கமண்டல நாக நதியும் தலைவிருச்சமாக மாகா வில்வமும் திகழ்கின்றன. 

See also  தென்பெண்ணை ஆற்றுக்கு மகா ஆரத்தி வழிபாடு

குழந்தை வரம் தரும் ஈசன்  

பிரதோஷ தினத்தில் நந்திக்கு நடைபெறும் பூஜையில் குழந்தை இல்லாத தம்பதிகள் மூன்று பிரதோஷ கலந்து கொண்டு அபிஷேகபாலை உட்கொண்டால் அடுத்த வருடமே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இத்தலத்தின் ஐதீகம். 

கல்வெட்டு ஆதாரங்கள் 

சோழர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் பல கோட்டங்கள் இருந்தன. அதில் பத்தாம் நூற்றாண்டில்¸ பல்குன்றக் கோட்டத்தின் உபகோட்டமாக வசுகூர் நாடு எனப்பட்ட நகரத்தின் தலைநகராக வசூர் இருந்தது என்பது கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகிறது. இப்புகழ் வாய்ந்த வசூரின் தென்மேற்கே கி.பி. 939-968-ம் ஆண்டுகளில் ஆட்சி செய்து வந்த இராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணன் என்பவரால் இந்த சிவாலயமும்¸ திருக்குளமும் கட்டப்பட்டது. இப்பெருமானின் திருநாமம் வசுகூர் நாட்டு வசுகூர் ‘ஊருடைய பெருமாள்” திரு வச்சிரப்பாக்கத்து தேவர் என கல்வெட்டுகள் விவரிக்கின்றன. இதையே சம்புவராயர் கால கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றது. அருகில் உள்ள படியம்பட்டு¸ புதுப்பாளையம்¸ காப்பலூர் மற்றும் கலசபாக்கம் போன்ற கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் சான்றாக உள்ளன. அரசு பதிவேடுகளும் புலஎண் 108-ல் சுமார் 0.38 சென்டுகளில் சிவாலயம் இருந்தது என்பதை உறுதி செய்கிறது.  

See also  துலாம்¸விருச்சகம்¸தனுசு ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

வயல் வெளிகளில் ஏரோட்டும் போது கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமும் நந்தியும் மேற்கூரை அமைத்து வழிபட்டனர். பின்னர் தற்காலிகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு பிரதோஷ பூஜைகள் நடந்து வருகின்றது. தினந்தோறும் ஒருகால பூஜை நடந்து வருகின்றன.  இத்திருப்பணிகளுக்கு ஸ்ரீ காஞ்சி பெரியோர்கள் ஆசி வழங்கியுள்ளனர். ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இத்தலத்தில் உள்ள பெருமானுக்கு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீகல்யாணபுரீஸ்வரர் என்ற திருநாமம் அருளி உள்ளார்.  

இப்போது கோயில் அருகே கல்யாண விநாயகர் கல்யாண தட்சணாமூர்த்தி மற்றும் அம்பாள் சன்னதி கட்டப்பட்டு வருகிறது. எனவே இத்திருக்கோவிலை முழுமையாக அமைத்திட அன்பர்கள் பொருள் உதவி தந்து உதவி சிவனின் அருள்பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புக்கு:

ஸ்ரீ ஜெ.எஸ்.மஹாபலேஸ்வர்பட் 

ஸ்ரீ சங்கர வேத பாடாசாலை¸ 15¸சன்னதிதெரு¸ போளுர்.

செல்: 9486171649¸ 9344806043.

செந்தில்குமார் 

செல்: 9487609330.

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ கல்யாணபுரீஸ்வரர் சேவா டிரஸ்ட்-போளுர்

KARUR VYSYA BANK-POLUR A/c No. 1182 155 21910

See also  வெண்மணியில் ஒரு அண்ணாமலையார் கோயில்

IFSC No : KVBL0001182.

அமைவிடம்:

போளுரில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் உள்ளது. போளுரில் இருந்து 2-வது கீலோ மீட்டர் தூரத்தில் வசூர் கிராமம் உள்ளது. 

ப. பரசுராமன் 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!