அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வரும் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி அன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக பந்தக்கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது, கட்டளைதார்கள், உபயதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை நகரில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற நினைத்தாலே முக்தி தரும் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக இராஜ கோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது, கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் இன்றி பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.
இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு வரும் நவம்பர் 29.11.2020அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 29.11.2020 அன்று அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும், மாலையில் 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது, பத்து நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவை கான பல்வேறு மாநிலங்களில் இருந்து பல இலட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு வருவார்கள்.
பத்து நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் பூர்வாங்க பணிகளுக்காக இன்று திருக்கோயிலில் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது, அதனை தொடர்ந்து திருக்கோயிலில் இருந்து பந்தக்கால் கொண்டுவரப்பட்டு விநாயகர், முருகர், மகா ரதம், சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட திருத்தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் இராஜ கோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது,
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி¸ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்¸ கோயில் இணை ஆணையர் ஞானசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பந்தக்கால் நடும் விழாவை தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழாவின் பத்து நாட்களுக்கு காலையும் மாலையும் சுவாமிகள் மாடவீதி உலா வரும் விமானங்களும் திருத்தேர்களும் பழுது பார்க்கப்பட்டு வண்ணங்கள் பூசும் பணி இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
கொடியேற்றம்¸ தேரோட்டம்¸ தீபத்திருவிழா¸ தெப்பல் உற்சவம் ஆகியவை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விதிக்கும் நிபந்தனைகளின்படியே நடைபெறும் என்று கோயில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.
ReplyForward
|