Homeசெய்திகள்மகன் இறந்தது தெரியாமல் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தாய்

மகன் இறந்தது தெரியாமல் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தாய்

மகன் இறந்தது தெரியாமல் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தாய் அங்கு மகன் இறந்து கிடந்ததை பார்த்து உடல் மீது விழுந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

இது பற்றிய விவரம் வருமாறு,

திருவண்ணாமலை ராமலிங்கனார் 3வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் இ.சேவை மையம் நடத்தி வருகிறார். மனைவி பெயர் பாக்கியலட்சுமி. இவருடைய மகன் சிவசுதாகர் (வயது 32) ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

மகன் இறந்தது தெரியாமல் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தாய்

சிவசுதாகர் மனைவி தேவிக்கு 15 நாளைக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்ததது. செய்யாறில் உள்ள தாய் வீட்டுக்கு தேவி சென்றிருந்தார். இந்நிலையில் ஆறுமுகம் தனது குடும்பத்துடன் துணி வாங்க காஞ்சிபுரத்திற்கு சென்றார். துணி வாங்கி முடித்து விட்டு சிவசுதாகர், தனது நண்பர் சஞ்சய் என்பவருடன் பைக்கில் மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக செய்யாறு சென்று விட்டார்.

பிறகு செய்யாறில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்தார். சேத்துப்பட்டு அடுத்த வெளுக்கம்பட்டு கூட்டு ரோடு அருகே வரும் போது எதிரே வந்த கார் மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட சிவசுதாகர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

See also  மாமூல் இன்ஸ்பெக்டர் -ஆடியோ வெளியாகி பரபரப்பு

மகன் இறந்தது தெரியாமல் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தாய்

பைக்கில் இருந்த சஞ்சய், காரில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்க்பபட்டனர்.

இந்நிலையில் சிவசுதாகரின் தந்தை ஆறுமுகம், காஞ்சிபுரத்தில் துணிகளை வாங்கிக் கொண்டு மனைவியுடன் பைக்கில் திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்தார். வெளுக்கம்பட்டு கூட்டு ரோடு அருகே வந்த போது ஏதோ விபத்து நடந்திருப்பதாக எண்ணி அங்கு சென்று பார்த்தனர்.

மகன் இறந்தது தெரியாமல் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தாய்
மகன் உடல் மீது விழுந்து கதறும் பாக்கியலட்சுமி

விபத்தில் தனது மகன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிவசுதாகரின் உடல் மீது விழுந்து பாக்கியலட்சுமி அழுது புரண்டது காண்போரை கண் கலங்க செய்தது.

இச்சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!