Homeசெய்திகள்அரியர் பாஸ்- முதல்வரை வாழ்த்தி கோஷம்

அரியர் பாஸ்- முதல்வரை வாழ்த்தி கோஷம்

‘அரியர் பாசாக வைத்த தெய்வமே”  

எடப்பாடியை வாழ்த்தி கோஷம்


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். 

முன்னதாக கலெக்டர் அலுவலகம் செல்ல அவர் போளுர் ரோட்டில் சென்ற போது அவரை வாழ்த்தி அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர். மாணவர்கள் தரப்பிலும் ‘அரியர் பாசாக வைத்த தெய்வமே வாழ்க’ என கோஷம் எழுப்பப்பட்டது. அவர்களை பார்த்து கை அசைத்து கொண்டே புன்முறுவலுடன் சென்றார் முதல்வர். 

ஈரோட்டில் முதல்வரை வாழ்த்தி ‘அரியர் மாணவர்களின் அரசனே’ என கட் அவுட் வைக்கப்பட்டது. ‘மாணவர்களின் மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கே’ என பத்திரிகைகளில் முழு பக்கம் விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலையில் முதல்வரை வாழ்த்தி கோஷம் எழப்பப்பட்டுள்ளது.. 


ராஜன்தாங்கல்¸ஆவூரில் கொட்டும் மழையில் வரவேற்பு 

விழுப்புரம் ஆய்வு கூட்டத்திற்கு சென்ற முதல்வருக்கு அதிமுகவினர் கொட்டும் மழையிலும் வரவேற்பு அளித்தனர். ராஜன்தாங்கலில் ஆவின் இயக்குநர் தட்சணாமூர்த்தி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே போல் ஆவூரில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் செந்தில்குமரன் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.    அதிமுக நிர்வாகி கவிதா செந்தில்குமரன் தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்களும்¸ இளைஞர்களும் கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!