Homeஆன்மீகம்அண்ணாமலையார் தேர் 8ந் தேதி வெள்ளோட்டம்

அண்ணாமலையார் தேர் 8ந் தேதி வெள்ளோட்டம்

கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டத்திற்காக அண்ணாமலையார் தேர் ரூ.70 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதன் வெள்ளோட்டம் 8ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த வருட கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் மாதம் 4ந் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 13ந் தேதி மகாதீபமாகும். 7-ஆம் நாள் தேரோட்டம் நடக்கிறது. பெரிய தேர் எனப்படும் அண்ணாமலையார் தேரில் கட்டைகள், சட்டங்கள் வலுவற்ற நிலையில் இருந்ததால் அவைகளை மாற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.

இதன் பேரில் அண்ணாமலையார் தேர் புதுப்பிக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

அண்ணாமலையார் தேர் 8ந் தேதி வெள்ளோட்டம்

இப்பணியை திருவண்ணாமலை கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று (03.11.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

அண்ணாமலையார் கோயில் திருத்தேர் மராமத்துப் பணிகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் 59 அடி உயரம், சுமார் 200 டன் எடை அளவு கொண்டிருக்கிறது. 470 சிற்பங்கள் இத்தேரில் இடம் பெற்றிருக்கின்றது. 203 சிற்பங்கள் தற்பொழுது புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது. திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் தேரோட்டம் நிகழ்வு நடைபெற ஏதுவாக சுவாமி தேரில் மராமத்து பணிகள் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

See also  ஒரே ஆண்டில் 3 முறை சனி பெயர்ச்சியா?

தேரில் உள்ள சிற்பங்கள் ஈட்டி மரத்தினால் செய்யப்பட்டுள்ளது. நிலைகள் வேங்கை மரத்தினால் செய்யப்பட்டிருக்கின்றது. தேவாசனம், நராசனம். சிம்மாசனம் அலங்கார தூண்களில் உள்ள பழுதடைந்தவைகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும், தேவாசனம், சிம்மாசனம் மற்றும் இறையாசனம் இவற்றில் வரும் பழுதடைந்த பலகைகள் மாற்றப்பட்டுள்ளது.

அண்ணாமலையார் தேர் 8ந் தேதி வெள்ளோட்டம்

நான்கு கொடுங்கை நிலைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேரில் கண்டத்தில் வரும் பழுதடைந்த குத்துக்கால்கள் நீக்கப்பட்டு புதியதாக குத்தக்கால்கள் மற்றும் ரீப்பர்கள் மாற்றப்பட்டுள்ளது. தேரில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மா மற்றும் துவாரபாலகர் சிலைகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சுவாமி தேரில் இல்லாத இடங்களில் சிம்மயாழி -37, கொடியாழி -13,தேர் சிற்ப்பங்கள் 153 என மொத்தம் 203 தேர் சிற்பங்கள் மாற்றப்பட்டு, பஞ்சவர்ணம் பூச்சு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுவாமி திருத்தேர் வெள்ளோட்டம் எதிர்வரும் 8ந் தேதியன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. டிசம்பர் 10 ஆம் தேதி அன்று திருத்தேர் விழா விமர்சியாக நடைபெற உள்ளது. அது மட்டும் இன்றி இத்தேரில் இதுவரை இல்லாத அளவில் அனைத்து சிற்பங்களும் தெளிவாக தெரியும் வகையில் பொலிவான வண்ணங்கள் மற்றும் வார்னிஷ்கள் பூசப்பட்டு வருகிறது.

See also  தீச்சட்டி ஏந்தி கிரிவலம்-திடீர் சாமியார் அருள்வாக்கு

சுவாமி தேர் பல ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அண்ணாமலையார் தேர் 8ந் தேதி வெள்ளோட்டம்

தேரின் உறுதித்தன்மை சான்று (Stability Certificate) பொதுப்பணித்துறையிடமும் மற்றும் சாலையின் உறுதித்தன்மை குறித்தான சான்று (Road Stability Certificate) நெடுஞ்சாலைத்துறையிடம் கோரப்பட்டுள்ளது.

எனவே, சுவாமி தேரானது அனைத்து நிலைகளிலும் புதுப்பிக்கப்பட்டு புதிய தேராக பொலிவுடன் தேரோட்டம் நடைபெறும்.

இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம் பிரதீபன், கோயில் இணை ஆணையர் ஜோதி அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் சென்றிருந்தனர்.

முருகர் தேர் புதிய பீடத்தில் கலைநயமிக்க சிற்பங்கள்


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!