Homeஅரசியல்திமுகவுக்கு அதிர்ச்சி அளித்த அதிமுக

திமுகவுக்கு அதிர்ச்சி அளித்த அதிமுக

 பா.ஜ.கவை தொடர்ந்து

திமுகவுக்கு அதிர்ச்சி அளித்த அதிமுக

திமுக முக்கிய புள்ளிகளை வளைத்தது

திமுகவுக்கு அதிர்ச்சி அளித்த அதிமுக

திருவண்ணாமலைஓரந்தவாடி திமுக முக்கிய பிரமுகர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

திருவண்ணாமலையில் திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ஓரவந்தவாடி ஊராட்சியை சேர்ந்த திமுக ஒன்றிய அமைப்பு செயலாளர் ஆர்.ராஜப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏழுமலை, மேலவை பிரதிநிதி ஏ.அர்ஜுணன், வார்டு உறுப்பினர்கள் காளிங்கன், கார்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முனியப்பன் ஆகியோர் உள்பட 500 பேர் அக்கட்சிகளிலிருந்து விலகி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் மாவட்ட ஆவின் பெருந்தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுக துண்டுகளை அணிவித்து அவர்களை வரவேற்று பேசிய அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அதிமுகவின் லட்சியம் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். வளமான தமிழகத்தைப் படைத்து எல்லோரும் பயன் பெற வேண்டும் என்ற அம்மாவின் கொள்கையை பின்பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி¸ துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறந்த ஆட்சியை வழங்கி கொண்டிருக்கின்றனர். அதிமுகவில் இணைந்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அவர்களது நம்பிக்கை வீண் போகாது என்றார்.

See also  அதிமுகவை காப்பாற்ற போவது திமுகவாம்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, மாவட்ட கழக துணை செயலாளர் அமுதா அருணாசலம், மாவட்ட விவசாய பிரிவு துணை செயலாளர் எம்.கே.சம்பத், ஓரவந்தவாடியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் எல்.முருகன், ஆர்.செந்தில்குமார், ஜி.பெருமாள், கே.முருகன், க.பசுபதி, ஜி.திருமால், ஆர்.ராமன், கே.சக்திவேல், ஆர்.ஆறுமுகம், ஏ.அர்ஜுனன், ஏ.சேட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஓரவந்தவாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.பழனிராஜ் செய்திருந்தார்.

திருவண்ணாமலை நகரத்தில் திமுகவினர் பலர் அக்கட்சிகளிலிருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவும் திமுக முக்கிய புள்ளிகளை அக்கட்சியிலிருந்து விலக வைத்து திமுகவிற்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!