Homeசெய்திகள்திருவண்ணாமலை குயவர் மடத்திற்கு பூட்டு

திருவண்ணாமலை குயவர் மடத்திற்கு பூட்டு

திருவண்ணாமலை குயவர் மடத்திற்கு பூட்டு

திருவண்ணாமலை குயவர் மடத்தின் முன் நூற்றுக்கணக்கானோர் திரண்டு மடத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை கொசமடத் தெருவில் பாரத ஸ்டேட் வங்கி அருகில் குயவர் மடம் இயங்கி வருகிறது. இந்த மடத்திற்கு சொந்தமாக கடைகள்¸ குடோன்கள் உள்ளன. திருநீலகண்டர் பெயரில் திருமண மண்டபமும் இயங்கி வருகிறது.  பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இந்த மடத்திற்கு உள்ளது. இந்த மடத்தை நிர்வகிப்பவர்கள் மீது அதே சமுதாயத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்கத்தினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். 

பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவது¸ 1994 முதல் 2022 வரையில் பலகோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது¸ குலாலர் மக்களுக்கு சமயம்¸ தொழில்¸ கல்வி¸ பண்பாடு சார்ந்த எந்த நலத்திட்டங்களையும் வழங்காதது¸ புதிய உறுப்பினர்கள் சேர்க்காதது¸ சமுதாய மக்களுக்கு மடத்தில் முன்னுரிமை தந்து தங்குவதற்கு அனுமதி மறுப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்தி உள்ளனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த மடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இப்பிரச்சனை எதிரொலித்தது. இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த குயவர் மடத்தின் முன்பு இன்று உரிமை மீட்பு போராட்டம் நடத்தப் போவதாக மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதனால் அந்த மடத்தின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மடத்திற்குள் யாரும் செல்லாதிருக்க மடத்தின் நிர்வாகிகள் மடத்தை வெளிபக்கமாக பூட்டு போட்டு பூட்டிருந்தனர். 

திருவண்ணாமலை குயவர் மடத்திற்கு பூட்டு

திருவண்ணாமலை குயவர் மடத்திற்கு பூட்டு

மடத்தின் முன் திரண்ட நூற்றுக்கணக்கான மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்கத்தினர்¸ மடத்தின் நிர்வாகிகளை கண்டித்தும்¸ முறைகேடுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்கள். பிறகு மடத்திற்கு பூட்டு போட்டனர். இதே போல் மற்ற 2 வழிகளையும் அடைத்து பூட்டு போட்டனர். 

திருவண்ணாமலை குயவர் மடத்திற்கு பூட்டு

பேராட்டத்திற்கு சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத் தலைவர் மாநில துணைத்தலைவர் பரிசு உடையார் முன்னிலை வகித்தார். மணி மற்றும் வேலு¸ ரவிசந்திரன்¸ அண்ணாமலை¸ பாண்டு¸ ஏழுமலை¸ நடராஜன்¸ அன்பழகன்¸ பழனிச்சாமி¸  ஆறுமுகம்¸ பாலமுருகன்¸ பரணி¸ ராஜா¸ சிவா¸ விஜயகுமார்¸ சீனு¸ பழனி¸ சம்பத்¸  செல்வகுமார்¸ முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரிக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார். 

இது குறித்து மடத்தின் தலைவர் ஏழுமலை கூறுகையில் குயவர் மடம் 100 வருட பராம்பரியம் கொண்டது. மடத்தில் 660 பேர் உறுப்பினராக உள்ளனர். முறையாக தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து வருகிறோம். மடத்தில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை. குற்றச்சாட்டு சொல்பவர்கள் இந்த மடத்தின் உறுப்பினர்கள் இல்லை என்றார். 

முறைகேடு செய்துள்ள குயவர் மட நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் மேலும் தீவிரமாகும் என சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மடத்தின் உள்ளே சிலர் தங்கியிருந்ததால்¸ மாலையில் மடத்திற்கு போட்ப்பட்டிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டன. மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்கத்தினர் நடத்திய இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது. 

See also  சாமியார்¸ பா.ஜ.க செயலாளர்¸ ஓட்டல் அதிபர் கைது

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!