Homeசெய்திகள்திருவண்ணாமலை:காட்டில் மர்ம பையை எடுத்த கர்நாடக போலீஸ்

திருவண்ணாமலை:காட்டில் மர்ம பையை எடுத்த கர்நாடக போலீஸ்

திருவண்ணாமலை:காட்டில் மர்ம பையை எடுத்த கர்நாடக போலீஸ்

திருவண்ணாமலை மலையையொட்டி உள்ள காட்டில் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பையை கர்நாடக போலீசார் எடுத்துச் சென்றனர். 

பெங்களுரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்பவர் காதலித்து வந்தார். ஆனால் அவரது காதலை ஏற்க அந்த பெண் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகேஷ் ஆசிட்டை அந்த பெண் மீது ஊற்றி விட்டு தப்பியோடி விட்டார். இதில் அந்த பெண்ணின் உடல் வெந்தது. மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

தப்பியோடிய நாகேஷை கர்நாடக போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவனை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தனது குடும்பத்தாருடன் நாகேஷ் திருவண்ணாமலையில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதை போலீசார் கண்டு பிடித்தனர். இதையடுத்து திருவண்ணாமலைக்கு வந்த கர்நாடக தனிப்படை போலீசார் நாகேஷின் போட்டோவை வைத்து தேடினர். அப்போது அவன் திருவண்ணாமலை ரமணாசிரமத்திற்கு அடிக்கடி வருவது தெரிய வந்தது. எனவே பக்தர்கள் போல் ஆசிரமத்திற்கு உள்ளே நுழைந்த போலீசார் அங்கு தியானத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நாகேஷை கைது செய்தனர். 

திருவண்ணாமலை:காட்டில் மர்ம பையை எடுத்த கர்நாடக போலீஸ்

இந்நிலையில் இன்று மீண்டும் திருவண்ணாமலைக்கு கர்நாடக போலீசார் வந்தனர். ஒரு ஆம்புலன்ஸ் வேன்¸ 2 கார்களில் வந்த அவர்கள் நேற்று மாலை திருவண்ணாமலை- செங்கம் சாலையில் சிங்கமுக தீர்த்தம் பின்புறம் மலையையொட்டி உள்ள காட்டில் தேடுதல் வேட்டையை நடத்தினர். இதை கேள்விப்பட்டு பொதுமக்கள் அங்கு கூடினர். செய்தியாளர்களும் திரண்டனர். அவர்களை வீடியோ மற்றும் போட்டோ எடுக்கக்கூடாது என கர்நாடக போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும்¸ செய்தியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

திருவண்ணாமலை:காட்டில் மர்ம பையை எடுத்த கர்நாடக போலீஸ்

1 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு காட்டில் சுமார் 300 மீட்டர் தூரத்தில் கைப்பை ஒன்றை கர்நாடக போலீசார் கைப்பற்றினர். அதில் வெறும் துணிமணிதான் இருப்பதாக தெரிவித்த போலீசார் கைப்பையை திறந்து காட்ட மறுத்து விட்டனர். அந்த கைப்பை¸ கைதான நாகேஷ்சுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது. வெறும் துணிகள் அடங்கிய கைப்பையை எடுக்க இவ்வளவு தூரம் போலீசர் வந்திருக்க வாய்ப்பில்லை என்றும்¸ அந்த பையில் முக்கிய பொருள் ஏதாவது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

நாகேஷ்

கடந்த மாதம் கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்ற போது பெங்களுர் அருகே சிறுநீர் கழிக்க இறங்கிய நாகேஷ்¸ போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயற்சித்துள்ளான். கற்களை எடுத்து அவன் தாக்கியதால் போலீசார் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் நாகேஷ்சுக்கு காலில் குண்டு பாய்ந்தது. பிறகு நாகேஷை பிடித்த போலீசார் அவனையும்¸ காயமடைந்த போலீசாரையும் சிகிச்சைக்காக மருத்துவனையில் சேர்த்தனர். 

இன்று திருவண்ணாமலைக்கு வந்த போது குண்டடிபட்ட நாகேஷை ஆம்புலன்சில் அழைத்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

See also  போலி பாஸ் தயாரிக்க முடியாது-சேகர்பாபு கூறுகிறார்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!