Homeஆன்மீகம்வைகாசி அமாவாசை:அண்ணாமலையாருக்கு பிரமாண்ட அபிஷேகம்

வைகாசி அமாவாசை:அண்ணாமலையாருக்கு பிரமாண்ட அபிஷேகம்

வைகாசி அமாவாசை:அண்ணாமலையாருக்கு பிரமாண்ட அபிஷேகம்

திருவண்ணாமலை கோயிலில் இன்று சோமவார, வைகாசி அமாவாசையை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு 30 வகை வாசனை திரவியங்கள்¸ 20 வகை பூக்களை கொண்டு மகா அபிஷேகம் நடந்தது.

தந்தைக்கு உரிய கோளான சூரியனும்¸ தாயாருக்கு உரிய கோளான சந்திரனும் ஒரே ராசியில் ஒரே நட்சத்திரப் பாகையில் இணையும் நாளான அமாவாசையில் செய்யப்படும் வழிபாடு¸ தர்ப்பணம்¸ திதி ஆகியவற்றை முன்னோர்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை ஆகும். இதில் வைகாசி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு கிழமைகளிலும் வரும் அமாவாசை ஒவ்வொரு சிறப்பையும் பெறுகிறது. வெள்ளிக்கிழமை வரும் அமாவாசை சுக்கிர அமாவாசை எனப்படுகிறது. அதுவே திங்கட்கிழமை வந்தால் சோமாவார அமாவாசையாக வழிப்படப்படுகிறது. சோமாவார அமாவாசை என்பது வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவை வரும். இந்நாள் சந்திரனுக்கு உகந்தது. அன்று சந்திரன் ஆதிக்கம் நிறைந்த நாளாகும்.

சோமன் என்று சொல்லக் கூடிய சந்திரனுக்கு யாருக்கும் தராத மிகப்பெரிய இடத்தை சிவபெருமான் தந்துள்ளார். சந்திரன் தேய்ந்து அடியில் விழுந்த போது தூக்கி மடியில் வைக்காமல் சிவபெருமான் தனது முடியில் வைத்தார். இப்படி சோமனை சூடிக் கொண்ட சோமநாத மூர்த்தியாக¸ சந்திர மவுலீஸ்வரராக எழுந்தருளும் சிவபெருமானுக்கு¸ சிவாலங்களில் அன்றைய தினம் விசேஷ பூஜைகள் செய்யப்படும்.

வைகாசி அமாவாசை:அண்ணாமலையாருக்கு பிரமாண்ட அபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வருடந்தோறும் வைகாசி அமாவாசையை யொட்டி மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி சோமாவாரத்தோடு வந்த வைகாசி அமாவாசையான இன்று கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெரிய நாயகர் என்று அழைக்கப்படுகின்ற உற்சவ மூர்த்தியான அண்ணாமலையார்¸ உண்ணாமலையம்மன்¸ விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

See also  85 ஆயிரம் டன் பருமன் உள்ள ஆகாய லிங்கத்தின் சிறப்புகள்

இளவரசு பட்டம் சீனிவாச சிவாச்சாரியாரால் ஸ்தாபன பூஜை செய்யப்பட்டு அண்ணாமலையாருக்கு பச்சரிசி¸ அபிஷேக பொடி¸ தவனம்¸ நெல்லி¸ முள்ளி பொடி¸ திரவிய பொடி¸ ஆவாரம்பூ பொடி¸  செம்பருத்திப் பூ பொடி¸ மகிழம் பூ பொடி உள்ளிட்ட 30 வகை வாசனை திரவியங்கள் கொண்டும், ஆயிரம் லிட்டர் பால்¸ தயிர்¸ பஞ்சாமிர்தம்¸ தேன் அனைத்து பழ வகைகளின் சாறுகள்¸ நெய்¸ இளநீர்¸ விபூதி¸ சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டும் பிரமாண்டமான அபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது.

வைகாசி அமாவாசை:அண்ணாமலையாருக்கு பிரமாண்ட அபிஷேகம்
வைகாசி அமாவாசை:அண்ணாமலையாருக்கு பிரமாண்ட அபிஷேகம்

பிறகு 20 வகை பூக்களை கொண்டு மலர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ஸ்தபன பூஜையில் வைக்கப்பட்ட புனித கலசத்தில் உள்ள நீரை உற்சவ மூர்த்திகளான அண்ணாமலையார்¸ உண்ணாமலையம்மன்¸ விநாயகர்¸ சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்தபன நீர் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வைகாசி அமாவாசை:அண்ணாமலையாருக்கு பிரமாண்ட அபிஷேகம்வைகாசி அமாவாசை:அண்ணாமலையாருக்கு பிரமாண்ட அபிஷேகம்

இந்த அபிஷேகத்தை அருணாச்சலா வேத பாட சாலையைச் சேர்ந்த சிவனடியார்கள் கடந்த 27 ஆண்டுகளாக பக்தியுடன் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!